search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆய்வு கூட்டம்"

    • கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
    • வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெறாதது குறித்து ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கேள்வி கேட்டார்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 21 கிராம ஊராட்சிகள் உள்ளது. இதில் சவண்டப்பூர், அம்மா பாளையம், மேவாணி, பெருந்தலையூர், பொம்மநாய்க்கன் பாளையம், பொலவக்காளி பாளையம், கடுக்காம் பாளையம், சந்திராபுரம் ஆகிய 8 ஊராட்சிகளும், கூகலூர் மற்றும் பி.மேட்டுப்பாளையம் ஆகிய 2 பேரூராட்சிகளும் அந்தியூர் தொகுதிக்குள் அடங்கியுள்ளது.

    இது சம்பந்தமான வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

    ஆய்வு கூட்டத்தில் கோபி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுந்தர வடிவேல், சக்திவேல், ஊராட்சி ஒன்றிய பொறியாளர், 8 ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    ஆய்வு கூட்டத்தில் 8 ஊராட்சிகள் மற்றும் 2 பேரூராட்சிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெறாதது குறித்து ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கேள்வி கேட்டார்.

    அதைத்தொடர்ந்து கோபி யூனியனில் உள்ள 21 ஊராட்சிகளில் 13 ஊராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்தும் அதிகாரிகள் 8 ஊராட்சிகளில் போதிய கவனம் செலுத்தி வளர்ச்சி பணிகளை முடிக்க வேண்டும்.

    முதல்-அமைச்சர் ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தர உள்ள நிலையில் இது போன்று பணிகள் தொடங்காமல் இருந்தால் அந்த பணிகள் ரத்து செய்யப்பட்டு வேறு ஊராட்சிகளுக்கு வழங்கும் நிலை ஏற்படும். அதே போன்று தொடங்கிய பணிகளும் முழுமையாக போர்க்கால அடிப்படையில் முடிக்க வேண்டும்.

    அலுவலக அதிகாரிகள் மற்ற ஊராட்சிகளுக்கு பணி வழங்குவது போன்று அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குள் உள்ள 8 ஊராட்சிகளுக்கும் பணிகளை வழங்குவதோடு, விரைந்து முடிக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

    • வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டுறவுத்துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர்க்கடன் குறித்தும் ஆய்வு செய்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில் ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர், ஆணையர் (ஆவணகாப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி த்துறை) பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர், ஆணையர் (ஆவணகாப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறை) பிரகாஷ் வேளாண்மை- உழவர் நலத்துறை சார்பில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி த்துறை சார்பில் அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டம் சமத்துவபுர குடியிருப்புகள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ஜல்ஜீவன் மிஷன், அம்ருத் 2.0, தூய்மை பாரத இயக்கம் 2.0 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நிலுவையில் உள்ள பட்டாக்கள், வட கிழக்கு பருவ மழை முன்னே ற்பாடு பணிகள், பள்ளி க்கல்வி த்துறை சார்பில் இல்லம் தேடிகல்வி, எண்ணும் எழுத்தும் இலக்கியம்.

    பள்ளிக் கட்டிடங்களின் உட்கட்டமைப்பு வசதிகள், மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மக்களைத் தேடி மருத்துவம், சிறப்பு திட்ட செயலாக்கம், நான் முதல்வன், உங்கள் தொகுதியில் முதல்-அமை ச்சர், முதல்- அமைச்சரின் காலை உணவு திட்டம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டச்சத்து உறுதி செய் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்ட ப்பணிகள் குறித்து தொடர்புடைய துறை அலுவலர்களு டன் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் கூட்டுறவுத்துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர்க்கடன் குறித்தும் ஆய்வு செய்தார்.

    மேலும் தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் ஈரோடு மாவட்டத்தில் உள்ளஅனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையிலும் மற்றும் முதல்-அமைச்சரின் செயல்பாட்டிற்க்கு உறுதுணையாக இருக்கும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து தங்களது பணியினை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். மற்றும் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிரா மஊராட்சிகள் ஆகிய பகுதிகளில் பொது மக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைத்திடவேண்டும் என அலுவலர்களுக்கு ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) நார ணவ்ரே மனிஷ் சங்கர்ராவ் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) செல்வராஜன், இணை இயக்குநர் (வேளாண்மை -உழவர் நலத்துறை) வெங்கடேசன் (பொ), ஈரோடு அரசு மருத்துவ க்கல்லூரி மருத்துவ மனை முதல்வர் டாக்டர் வள்ளி, துணை இயக்குநர் (சுகாதாரபணிகள்) டாக்டர் சோமசுந்தரம், மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணை ப்பதிவாளர் ராஜ்குமார், மாநகர நல அலுவலர் பிரகாஷ் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தனியார் திருமண மண்டபத்தில் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது
    • 37 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர்

    செங்கம்:

    செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பஞ்சாயத்துகளில் நடைபெற்ற வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.

    புதுப்பாளையம் ஒன்றிய குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிர்மலா, கோபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 37 ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி செயலர்கள் உட்பட புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஓவர்சியர், பொறியாளர்கள், அனைத்து அதிகாரிகளும் இந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சியிலும் நடைபெற்ற திட்டங்கள், செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள், செயல்படுத்த வேண்டிய அடிப்படை தேவைகள் உள்ளிட்டவைகள் குறித்து கலெக்டர் முழுமையாக ஆய்வு செய்தார்.

    அப்போது செய்து முடிக்கப்பட்ட பணிகள் செலவிடப்பட்ட தொகை குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் அரசு தரப்பில் இருந்து அறிவிக்கப்படும் திட்டங்கள் வளர்ச்சிப் பணிகள் மக்களுக்கு உடனுக்குடன் சென்று சேர வேண்டும் எனவும், மக்களுக்கு பயனுள்ள வகையில் திட்டங்களை உடனுக்குடன் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    • கள்ளச்சாராயம் நடமாட்டம் உள்ளதா என கிராம நிர்வாக அலுவலர்கள் வட்டாட்சியருக்கு தெரிவிக்க வேண்டும்.
    • பொதுமக்கள் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பானவிபரங்களை தெரிவிக்க “10587 இலவச அழைப்புஎண்ணிற்கோ (அ)“8300018666” என்ற எண்ணிற்கோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

    மயிலாடுதுறை :

    மயிலாடுதுறை மாவட்டத்தில் கள்ளச்சாராய ஒழிப்பு மற்றும் கள்ளச்சாராயம் தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டம் அனைத்து துறைஅலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை வகித்தார்.

    கூட்டத்தில் நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் கள்ளச்சாராயம் நடமாட்டம் உள்ளதா என கிராம நிர்வாக அலுவலர்கள் வட்டாட்சியருக்கு தெரிய–ப்படுத்தி காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    பொதுமக்கள் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பானவிபரங்களை தெரிவிக்க "10587 இலவச அழைப்புஎண்ணிற்கோ (அ)"8300018666" என்ற எண்ணிற்கோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

    இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ்,மாவட்ட காவல் துணைகண்காணிப்பாளர் சஞ்சீவ் குமார், உதவி ஆணையர் நரேந்திரன், மாவட்ட மேலாளர் நாகப்பட்டினம் வாசுதேவன் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர்கள் அர்ச்சனா, யுரேகா மற்றும் காவல் துறை அலுவலர்கள் வருவாய் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • வட்ட அளவிலான எரிவாயு சிலிண்டர் விநியோகம் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.
    • குறைகளும் நிவர்த்தி செய்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை வட்ட அளவிலான எரிவாயு சிலிண்டர் விநியோகம் குறித்த ஆய்வு கூட்டம் திருத்துறைப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைப்பெற்றது.

    மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா தலைமை வகித்தார்.

    வட்ட வழங்கல் அலுவலர்கள் திருத்துறைப்பூண்டி அலெக்ஸாண்டர், முத்துப்பேட்டை வசுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் எரிவாயு விநியோக குறைபாடுகள் குறித்தும், புதிய சிலிண்டர்கள் பெறும் வழிமுறைகளை எளிதாக்குவது, மண்ணெண்ணை, சமையல் ஆயில், ரேஷன் பொருட்கள் விநியோகம், அங்காடி செயல்பாடு, குறித்தும் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது,

    அனைத்து குறைகளும் நிவர்த்தி செய்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

    இதில் பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார், நாச்சிகுளம் நுகர்வோர் குழு தலைவர் பொன்வேம்பையன், செயலாளர் பாசில் அகமது மற்றும் எரிவாயு முகவர்கள் கலந்துக் கொண்டனர்.

    வருவாய் ஆய்வாளர் சேக்தாவூது நன்றி கூறினார்.

    • ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது.
    • ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு குடிநீர் திட்ட பணிகளுக்கான திட்டமிடுதல் குறித்து எடுத்துரைத்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட ரங்கில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 33 ஊராட்சி தலைவர்க ளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பங்கேற்று பேசியதாவது:-

    பொதுமக்களுக்கு தேவை யான குடிநீர், ஆழ்துளை கிணறு, திறந்தவெளி கிணறு மற்றும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஒரு பகுதிக்கு முழுமையான அளவு குடிநீர் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து செல்கிறது. ஆனால் கடைக்கோடி பகுதிகளுக்கு முழுமையாக செல்வ தில்லை.

    பொதுமக்களுக்கு முழுமையான அளவு தண்ணீர் செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துறை, ஊரக வளர்ச்சி துறை ஒருங்கி ணைந்து சென்னையில் உள்ள நீர்வள ஆதார ஆராய்ச்சியாளர்கள் வரவழைக்கப்பட்டு மாவட்டத்தில் வறட்சி பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு முழுமையான குடிநீர் வழங்கும் வகையில் பணிகள் திட்டமிடப் பட்டுள்ளன. அந்த வகையில் தற்பொழுது மேற்கொள்ள திட்டமிட்ட பணிகளை விரைந்து முடித்து பொது மக்களுக்கு தேவையான தண்ணீர் வழங்கும் வகையில் பணிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    தற்போதுள்ள நிலவரப்படி ஒவ்வொரு ஊராட்சி மன்ற பகுதியில் எந்த அளவிற்கு தண்ணீர் கிடைக்கிறது?, எவ்வளவு தண்ணீர் தேவைப்படும்? என்பதை திட்டமிட்டு ஆய்வு அலுவலர்கள் வருகையின் போது தெரிவிக்க வேண்டும். மேலும் அவர்க ளுடன் ஒருங்கி ணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அனைத்து ஊராட்சி மன்றத் தலை வர்களும் மக்களின் தேவையை அறிந்து திட்டங்களை மேற்கொள்ள உறுதுணையாக இருப்பதுடன் அவர்களுக்கு குடிநீர் வடிகால் வாரியத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, மின் பகிர்மான கழகத்தினர் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள்.

    திட்டமிட்டபடி பணிகளை அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு மக்கள் தொகை அடிப்படை யில் 2054-ம் ஆண்டு வரை பொதுமக்களுக்கு போதிய அளவு தண்ணீர் வழங்கும் வகையில் செயல்பட உள்ளன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் நீர்வள ஆதார திட்டத்துறையின் விஞ்ஞானிகள் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு குடிநீர் திட்ட பணிகளுக்கான திட்டமிடுதல் குறித்து எடுத்துரைத்தனர்.

    இதில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன்குமார், உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயண சர்மா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் பரமசிவம், நீர்வள ஆதாரத்துறை பொறியாளர் இளங்கோ வன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் சண்முகநாதன், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சுந்தரேசன், திருப்புல்லாணி ஊராட்சி சேர்மன் புல்லாணி,பி.டி.ஓ.க்கள் கணேஷ்பாபு, ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவுரை
    • ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சித்ரா பவுர்ணமி கிரிவல ஏற்பாடுகளை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    இது குறித்த ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில் :-

    தமிழகத்தில் அதிக அளவில் ஆன்மீக மக்களே உள்ளனர். 38 வருவாய் மாவட்டங்களில் அதிகளவில் ஆன்மீக மக்கள் வருகை தரும் மாவட்டங்க ளில் திருவண்ணாமலையும் ஒன்றாகும்.

    சட்டமன்ற கூட்டத்தில் தமிழக முதல- அமைச்சர், தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக உள்ளது. அதற்கு உதாரணம் கார்த்திகை தீபத்தின் போது 25 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து பாதுகாப்பாக திரும்ப சென்றனர் என்று பெருமையாக பேசினார்.

    கார்த்திகை தீபப் பணியை அடிப்படையாகக் கொண்டு சித்ரா பவுர்ணமிக்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை இணைந்து செயல்பட வேண்டும்.

    இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் கூறியது போன்று கோவிலில் வரிசையை நீளம் செய்தால் பக்தர்கள் விரைந்து சாமி தரிசனம் செய்வார்கள். திருட்டு போன்ற செயல்கள் நடைபெறுவது தவிர்க்கப்படும்.

    சித்ரா பவுர்ணமி கோடை வெயிலில் வருவதால் குடிநீர் வசதியை கூடுதல் செய்ய வேண்டும். தூய்மை அருணை போன்ற தன்னார்வலர்கள் அமைப்பினர்களை கொண்டு அதிகளவில் நீர், மோர் பந்தல்கள் அமைக்கலாம்.

    அன்னதானம் வழங்கும் இடத்தில் உணவை தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் வழங்குவதை உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் கண்டறிந்து அதனை உறுதி செய்ய வேண்டும்.

    மேலும் சித்ரா பவுர்ணமியொட்டி அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீசார் பெற்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

    கோவில் வளாகத்திற்குள் இ.சி.ஜி., அல்ட்ரா சவுண்ட் உள்ளிட்ட பரிசோதனை கருவிகளுடன் கூடிய அனைத்து வசதிகள் கொண்ட மருத்துவ முகாம் அமைக்க வேண்டும்.

    மேலும் சித்ரா பவுர்ணமி பணிகளை மேற்கொள்ள கண்காணிப்பு அலுவலர்களை மாவட்ட நிர்வாகம் நியமித்து அவர்கள் மூலம் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    சித்ரா பவுர்ணமி ஏற்பாடுகள் முதல்- அமைச்சர் பாராட்டும் அளவிற்கு சிறப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட கலெக்டர் முருகேஷ், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மாநில தடகள சங்க துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், இந்து சமய அறநிலைத்துறை முதன்மை செயலர் சந்திரமோகன், ஆணையாளர் முரளிதரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், கூடுதல் கலெக்டர் வீர் பிரதாப் சிங், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, ஓ.ஜோதி, பெ.சு.தி.சரவணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன்,, திருவண்ணாமலை நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், ஒன்றிய குழு தலைவர் கலைவாணி கலைமணி, முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதரன், முன்னாள் வார்டு கவுன்சிலர் கார்த்தி வேல்மாறன் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் அருணாச லேஸ்வரர் கோவில் இணை ஆணையர் குமரேசன் நன்றி கூறினார்.

    • ஆய்வு கூட்டம் பி.டி.ஓ. அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.
    • கோடை காலம் தொடங்கியதால் முறையான குடிநீர் விநியோகம் இருக்க வேண்டும்

     காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய த்துக்கு உட்பட்ட 30 பஞ்சாயத்துகளில் நடந்து வரும் மத்திய மாநில அரசு திட்ட பணிகள் உட்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் பி.டி.ஓ. அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.

    கூட்டத்தில் உதவி இயக்குனர் (தணிக்கை) லோகநாதன் தலைமை வகித்து 30 பஞ்சாயத்துகளில் நடந்து வரும் வளர்ச்சிப் திட்ட பணிகளை உரிய காலத்திற்குள் முடித்தல், தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட பணிகள் மற்றும் கோடை காலம் தொடங்கியதால் முறையான குடிநீர் விநியோகம் இருக்க வேண்டும் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    கூட்டத்தில் பி.டி.ஒ.க்கள் ரவி கலைவாணி மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மின்சாரத்துறை அலுவலர்களுடன் இணைந்து கூட்டு புலத்தணிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    • பொதுமக்கள் காட்டு யானைகளுக்கு உணவு வழங்கவோ, யானைகளுடன் செல்வி எடுப்பதோ மிகவும் ஆபத்தான செயலாகும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யானைகள் உயிரிழப்பதை தடுப்பதற்கான கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பதை தடுப்பதற்கான வன உயிரின காப்பாளர், மின்சாரத்துறை அலுவலர்கள், வேளாண் பொறியல் துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, காவல் துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி பேசியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்தில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளில் சிக்கியும், விவசாய நிலங்களில் கள்ளத்தனமாக அமைக்கப்பட்டுள்ள மின் வேலிகளில் சிக்கியும் யானைகள் உயிரிழந்து வருகிறது.

    வனப்பகுதிகள் மற்றும் வனத்திற்கு வெளியில் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில், வனத்துறை அலுவலர்கள், மின்சாரத்துறை அலுவலர்களுடன் இணைந்து கூட்டு புலத்தணிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளும்போது, குறைவான உயரத்தில் தொங்கி கொண்டிருக்கும் மின் கம்பிகளை உயர்த்தி அமைக்கவும், இரண்டு கம்பங்களுக்கு இடையிலான அதிக தொலைவுகளை சரி செய்து அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    வனப்பகுதிக்கு வெளியில், விவசாய நிலங்களில் யானைகள், காட்டுப்பன்றிகள், மயில்கள் மற்றும் இதர வன உயிரினங்களை கட்டுப்படுத்த கள்ளத்தனமாக அமைக்கப்படும் மின் வேலிகளை வனத்துறை அலுவலர்கள் மின்சாரத்துறை அலுவலர்களுடன் இணைந்து கூட்டு புலத்தணிக்கை மேற்கொண்டு, கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    சோலார் மின் வேலி அமைக்க வேளாண் பொறியியல் துறை மூலம் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டு செயல்பட்டு வரும் பகுதிகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தணிக்கை செய்து, அதில் அனுமதிக்கப்பட்ட அளவு மின்சாரம் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக தனி தொழில்நுட்ப குழு அமைத்து, சோதனை செய்து, குற்றங்கள் நடைபெறாமல் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    பொதுமக்கள் காட்டு யானைகளுக்கு உணவு வழங்கவோ, யானைகளுடன் செல்வி எடுப்பதோ மிகவும் ஆபத்தான செயலாகும். யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியே வரும் பட்சத்தில் அவற்றின் அருகே செல்லாமல் வனத்துறைக்கோ, காவல்துறைக்கோ உடனடியாக தகவல் அளித்தல் வேண்டும். வனத்துறையினரோ அல்லது காவல்துறையினரோ வரும் வரையில் யானைகளிடம் நெருங்காமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • கிளைச் செயலாளர்கள், கிளை உறுப்பினர்கள் ஆகியோருக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
    • சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆய்வு செய்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மத்திய ஒன்றியம், கம்மாளப்பட்டி, பி.கொல்ல அள்ளி, மோதுகொல்ல அள்ளி, பூகானஅள்ளி, காட்டம்பட்டி, ஆகிய ஐந்து ஊராட்சிகளுக்கு உட்பட்ட 36 கிளைகளில் உள்ள கிளைச் செயலாளர்கள், கிளை உறுப்பினர்கள் ஆகியோருக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    இந்த ஆய்வு கூட்டத்திற்கு தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தலைமையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் பி.சி.சம்பத், மாநிலத் துணைத்தலைவர் பாடி செல்வம், ஒன்றிய செயலாளர் சின்னசாமி, ஒன்றிய தலைவர் முருகன், ஒன்றிய அமைப்பு தலைவர் விநாயகம், ஊடகப் பேரவை செல்வநாயகம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • 5 வாக்கு சாவடிகளின் ஆய்வுக் கூட்டம் நடந்தது.
    • கழக நிர்வாகிகள், பாகநிலை முகவர்கள் கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    குன்னூர் நகரத்திற்கு உட்பட்ட 5 வாக்கு சாவடிகளின் ஆய்வுக் கூட்டம் மாவட்ட தி.மு.க செயலாளர் பா.மு. முபாரக் ஆலோசனைப்படி குன்னூர் நகர செயலாளர் எம்.ராமசாமி தலைமையில், குன்னூர் நகர தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பொதுக்குழு உறுப்பினர் செல்வம், நகர மன்ற துணைத் தலைவர் வாசிம் ராஜா, நகர அவை தலைவர் தாஸ், துணைச் செயலாளர்கள் சாந்தா சந்திரன், வினோத், நகர பொருளாளர் ஜெகநாத்ராவ், மாவட்ட பிரதிநிதிகள் மணிகண்டன், சார்லி மற்றும் கழக நிர்வாகிகள், பாகநிலை முகவர்கள் கலந்து கொண்டனர்.

    • இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பான ஆய்வு க்கூட்டம் நடைபெற்றது
    • நவம்பர் 9-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட ப்பட்டது.

    ஊட்டி

    நீலகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2023-ல் பெறப்பட்ட படிவங்கள் குறித்தும், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பான ஆய்வு க்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவர், நிர்வாக இயக்குனர் மற்றும் வாக்காளர் பட்டியல் பார்வையாளருமான சிவசண்முகராஜா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான அம்ரித் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சிவசண்முகராஜா பேசியதாவது:-

    இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி உத்தரவிற்கிணங்க, 1.1.2023 தேதியினை தகுதி நாளாகக்கொண்டு கடந்த ஆண்டு நவம்பர் 9-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட ப்பட்டது.

    இச்சுருக்கமுறை திருத்தத்தில் புதிய வாக்காளர்களாக பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் தொடர்பாக பெறப்பட்ட படிவங்கள் குறித்தும் மற்றும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு முழுமையான இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் வாக்காளர் பதிவு அலுவலரும், வருவாய் கோட்டாட்சியர்களான துரைசாமி (ஊட்டி), பூஷணகுமார் (குன்னூர்), முகமது குதுதுல்லா (கூடலூர்), நகராட்சி ஆணையாளர்கள் காந்திராஜ் (ஊட்டி), திரு.கிருஷ்ணமூர்த்தி (குன்னூர்), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தனபிரியா, தேர்தல் தாசில்தார் புஷ்பா தேவி, உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், தாசில்தார்கள் ராஜசேகர் (ஊட்டி),காயத்ரி (கோத்தகிரி), நடேசன் (பந்தலூர்), சித்தராஜ் (கூடலூர்), இந்திரா (குந்தா) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×